தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஹாரிஸ் ஜெயராஜ். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி மாதவன், ரீமாசென், நாகேஷ், விவேக் என பலர் நடித்து வெற்றியடைந்த மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹாரிஸ் ஜெயராஜ். அதன் பின்னர் லேசா லேசா,காக்க காக்க, கஜினி, அந்நியன், வேட்டையாடு விளையாடு என பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா, கமல், மாதவன் என பல முன்னணி கதாநாயகர்களுடன் பணிபுரிந்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் இசையமைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். பிலிம்பேர் விருதுகள், மிர்ச்சி இசை விருதுகள், விஜய் விருதுகள், கலைமாமணி விருது, தேசிய விருது என பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
கடந்த ஞாயிறு அன்று, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அவரது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் சிம்பிளாக திருமண நாளை கொண்டாடிய, ஹாரிஸ் குடும்பத்தினர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் அடித்து வருகிறது. இதையடுத்து ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.