இசையமைப்பாளரான ஹீரோ! சிம்புவின் அடுத்த படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்..! வெளியான தகவல் இதோ..

எத்தனை முறை விழுந்தாலும் தனது ரசிகனால் இன்று வரை கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சிம்பு. காதல் அழிவதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான தொட்டி ஜெயா, விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்கள் சிம்புவின் வெற்றியை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. லவ் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்க்கப்பட்டவர் சிம்பு. தற்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

பல சிக்கல்களை தாண்டி வந்தாலும் தொடர்ந்து அவர் தன் கருத்தில் உறுதியாக இருக்கிறோர். அவருக்கு எந்த சூழலிலும் அன்பளிக்கும் ரசிகர்கள் கூட்டம் எப்போதுமே ஆக்டிவ்வாக இயங்கிவருகிறது. சிம்புவின் மாநாடு படம் வரும் நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. சிம்புவும் இந்த லாக் டவுனை பயன்படுத்தி உடல் எடையை குறைத்துள்ளார். புதிய லுக்கில் சிம்பு செமயாக இருப்பதாக ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் சிம்பு-சுசீந்திரன் இணையும் புதிய படத்தின் தகவல் வந்தது. அப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது என்ன தகவல் என்றால் இதுவரை நமக்கு எல்லாம் நடிகரா பரீட்சயப்பட்ட ஜெய் இப்படம் மூலம் இசையமைப்பாளராக களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *