சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரது மனங்களையும் ஈர்க்கக்கூடியது இசை. பொதுவாகவே இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என பலரும் விரும்புவார்கள். ஆனால் அது அனைவருக்கும் அமைவது இல்லை. சிலருக்கு அது இயல்பிலேயே அந்த இசை ஞானம் வாய்த்துவிடுகிறது. இங்கே ஒரு சிறுவனுக்கும் அப்படித்தான். சாதிக்க வயது தடை இல்லை என்பார்கள். அதை அப்படியே மெய்ப்பிக்கும்வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நம் தமிழகத்தைப் பொறுத்தவரை இளையராஜா இசை என்றால் பச்சைக்குழந்தைக்கும் பிடிக்கும்.
மனிதர் அந்த அளவுக்கு அனு, அனுவாக ரசித்து இசையைக் கோர்த்திருப்பார். இங்கேயும் அப்படித்தான் இளையராஜா இசையைப் போலவே நம்மை மறந்து கேட்க வைக்கிறான் ஒரு சிறுவன். இரண்டு கருவிகளை மட்டுமே வைத்துக்கொண்டு இளையராஜா இசையில் மெகா ஹிட்டான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த தளபதி படத்தின் ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கொன்னும் பஞ்சமில்ல’ பாடலை இசை வடிவில் கொண்டுவர இணையத்தில் அது வைரலாகி வருகிறது.
முறையாக இசை கற்றுக்கொண்டால் வளர்ந்த பின் இளையராஜா போல வர வாய்ப்பிருப்பதாக குறித்த வீடியோவில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். இணையத்தை கலக்கி வரும் அந்த சிறுவனின் வீடியோ இதோ..