ஆவேசத்துடன் கொதித்தெழுந்து திட்டி தீர்த்த வனிதா..! தீயாய் பரவும் காணொளி..

பிக் பாஸ் புகழ் வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் அண்மையில் திருமணம் செய்து கொண்டார். அது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், சர்ச்சைகளுக்கு அதிரடியாக பதில் கொடுக்கும் விதமாக யூடியூப் சேனலில் காணொளி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ”என்னை பற்றி கமன்ட் செய்வது பரவாயில்லை. வார்த்தைகளை விடுறது ஈஸி. ஆனால், கர்மா ரொம்ப மோசமாக திருப்பி கொடுத்துவிடும். மற்றவர்கள் மீது பல தவறுகள் இருக்கிறது. அதை வைத்து என்னை ஜட்ஜ் செய்யாதீர்கள்.

வனிதா தற்போது தனக்கு எதிராக செயற்படுவர்கள் யார் என்பது தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளார். எனக்கு எதிரிகள் அதிகம் உள்ளனர். இப்படி என்னை காயப்படுத்துவது எனக்கு கவலையை ஏற்படுத்துகின்றது என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார். இதேவேளை, அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுபவர்கள் மீது கொதித்து எழுந்து திட்டியுள்ளார். அது மாத்திரம் இல்லை என்னை போல தைரியமான பெண் இதுவரை பிறக்க வில்லை. என்னை யாரால் எதிர்க்க முடியாது என்றும் வனிதா குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அவர் அழகு குறிப்புகளையும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இதுவரை குக்கிங் மாத்திரமே செய்து காட்டி வந்த நிலையில் தற்போது பெண்களுக்காக அழகு குறிப்புகளையும் கொடுக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாளர்களும் அதிகரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.