ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் சரத்குமார்! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் சரத்குமார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் 130 அதிகமான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கண்சிமிட்டும் நேரம் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் சரத்குமார். அதன் பின்னர் புலன் விசாரணை, சேரன் பாண்டியன், நட்புக்காக, சூர்யவம்சம், நாட்டாமை போன்ற பல்வேறு வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் திருமணம் செய்து கொணடனர் இவர்களுக்கு ராகுல் என்று ஓர் மகன் உள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமா நடிகர் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். ஆகஸ்ட் 31, 2007 அன்று, சரத்குமார் புதிய கட்சியை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துவக்கினார்.

இந்நிலையில் சரத்குமார் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இது சரத்குமாரா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த அளவு தாடி எல்லாம் வளர்ந்து அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். குறித்த புகைப்படத்தில் அவரின் செல்லப்பிராணியான நாயும் உள்ளது. குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

Coexistence is life

A post shared by Sarath Kumar (@r_sarath_kumar) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!