மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய நடிகை மற்றும் பாடகி. மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். பிரேமம் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தவர் மடோனா செபஸ்டீன். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைத்து தரப்பு மக்களையும் இவரைப் பார்த்து ரசிக்க வைத்தது.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதியும் ஜோடியாக நடித்தார். இவர்களது நடிப்பில் வெளிவந்த கவன் திரைப்படம் இருவருக்கும் ஒரு நல்ல பெயரை தமிழ் சினிமாவில் பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த பவர் பாண்டி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் இல்லாவிட்டாலும் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.
கடைசியாக இவர் நடித்த படம் வானம் கொட்டட்டும், தற்போது சசிகுமாருடன் சேர்ந்து கொம்பு வச்ச சிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது கொரோனா காரணமாக அந்த படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. வாட்ட சாட்டமாக , வாளிப்பாக இருந்த மடோனா செபஸ்டீன் தற்போது உடல் எடை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போயுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், உங்களை அடையாளம் கண்டு பிடிக்கவே முடியவில்லை. உங்களுக்கு என்ன ஆச்சு..? என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.