தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் குணச்சித்திரம் மற்றும் வில்லனா நடிகராக நடித்த நடிகர் மன்சூர் அலி கான். வேலை கிடைச்சுடுச்சு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் கேப்டன் பிரபாகரன், தங்கமான தங்கச்சி, செம்பருத்தி, நாளைய தீர்ப்பு போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் நடிகர் மன்சூர் அலி கான்.

தமிழ் திரையுலகில் முன்னணி வில்லன் நடிகர்களில் மிகவும் மிரட்டலான ரசிகர்கள் கவர்ந்து வில்லன் என்றால் அதில் நடிகர் மன்சூர் அலி காணும் கண்டிப்பாக இருப்பார். இவர் கடைசியாக நடிகை ஜோதிகா, மற்றும் நடிகை ரேவதி இணைந்து நடித்து கல்யாண் என்பவரின் இயக்கத்தில் வெளியான ஜாக்பாட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஏன் சமீபத்தில் 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி 100 கோடி வசூல் செய்த கைதி படத்தில் கூட முதலில் இவரை நினைத்து தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதையை எழுதியுள்ளார். இந்நிலையில் தனது உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகர் மன்சூர் அலி கான். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..