ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் நடிகர் பிரபாஸ்..! புகைப்படம் உள்ளே..

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவர் நடிகர் பிரபாஸ். ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் பிரபாஸ். அதன் பின்னர் சத்ராபதி, பில்லா, டார்லிங், மிர்ச்சி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து ராஜமௌலியின் பாகுபலி படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணா, நாசர், சத்யராஜ், தமன்னா என பலர் நடித்து வசூல் செய்த படம் தான் பாகுபலி.

நடிகர் பிரபாஸ் கடந்த சில வருடங்களுக்கு முன் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு நடிகர். ஆனால் பாகுபலி என்ற படத்திற்காக அவர் 5 ஆண்டுகள் கஷ்டப்பட்டதற்கு உலகம் முழுவதும் அப்படம் மூலம் பிரபலமானார். அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களும் 5 மொழிகளில் தயாராகும் அளவிற்கு நன்கு பிரபலம் ஆகிவிட்டார். அண்மையில் கூட அவரது நடிப்பில் ஒரு பெரிய பட்ஜெட் படம் தயாராகிறது.

அதற்கான அறிவிப்பு கூட சமீபத்தில் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. தற்போது பிரபாஸின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபாஸ் மீசை, தாடி இல்லாமல் இருக்கும் பழைய புகைப்படம் அது, புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரபாஸ் எப்படி இருந்துள்ளார் என ஆச்சரியமாக பார்க்கின்றனர். இதோ அந்த புகைப்படம்,

Leave a Reply

Your email address will not be published.