விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தனியாக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த நாடகத்தில் முல்லை, மீனா, தனம், ஜீவா, கதிர் என அதில் வரும் அணைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம். காண காணும் காலங்கள் சீரியல்கள் மூலம் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் வெங்கட்.

அதன் பின்னர் தெய்வம் தந்த வீடு, நினைக்க தெரிந்த மனமே, மெல்ல திறந்த கதவு போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஜீவா என்கிற வெங்கட். இவர் இதற்கு முன் ஏகப்பட்ட சீரியல்கள் நடித்துள்ளார், மக்களாலும் இவர் நடித்த கதாபாத்திரங்களை மறக்க முடியாது. அண்மையில் இவருக்கு விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க பின் கொரோனாவால் தள்ளிப்போயுள்ளது.
இந்த நிலையில் வெங்கட் தனது இன்ஸ்டா பக்கத்தில் 12 வருடத்திற்கு முன் எடுத்த தன்னுடைய புகைப்படத்தை போட்டு இது கனா காணும் காலங்கள் நடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என பதிவு செய்துள்ளார்.