தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். ரெமோ படம் ரசிகர்கள் மத்தில் இவருக்கென தனி இடத்தை பிடித்து தந்தது. தற்போது விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் மற்றும் ரஜினியுடன் அண்ணாத்த படம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த நடிகையர் திலகம் எனும் படத்திற்காக இவர் வாங்கிய தேசிய விருது இவருக்கு தென்னிந்திய திரையுலகில் மிக சிறந்த நடிகை எனும் பெயரை பெற்று தந்தது. மேலும் சமீபத்தில் சோலோ ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த பென்குயின் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், நடிகை கீர்த்தி சுரேஷா இது, ஆள் அடையாளமே தெரிவில்லையே, என கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..