தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி. இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதை நாம் அறிவோம். இவர்கள் இருவரும் முன்னாள் நடிகர் சிவகுமாரின் மகன்கள். நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி இருவருமே தனித்தன்மை வாய்ந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்கள். நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராகவும், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நல்ல மனிதராகவும் இருக்கிறார்.
சமீபத்தில் சூர்யா நடித்து இயக்குனர் சுதா கொங்காரா இயக்கிய சுரரைப் போற்று படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் நல்ல நடிகராகவும், விவசாயிகள் மீது அக்கறை கொண்டவராக இருக்கிறார். தற்போது நடிகர் கார்த்தி ‘பொன்னியின் செல்வன்’, ‘சுல்தான்’ மற்றும் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்திக்கின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அட நம்ம நடிகர் சூர்யா, கார்த்தியா இது, ஆள் அடையாளமே தெரியவில்லையே, என்று கூறி வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படங்கள்..
#Karthi – #Suriya such a cute 😍 brothers 🤗 pic.twitter.com/lGwwUH2bhc
— G!R! Яamki (@giri_prasadh_r) January 12, 2021