ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மருத்துவர்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்.. குழந்தையை கையில் ஏந்தியபடி வைரலாகும் புகைப்படம்!

ஹார்டிக் பாண்ட்யா ஒரு இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார்.  இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கும், செர்பிய நாட்டு நடிகை நடாஸா ஸ்டான்கோவிக்கிற்கும் இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்தி வந்தனர். மேலும், மே 31ஆம் தேதி அன்று ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் நடாசா கர்ப்பமாக இருப்பதை ஹர்திக் பாண்டியா அறிவித்திருந்தார்.

அதில், “நடாசாவும் நானும் சேர்ந்து வாழ்க்கையில் ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம், அது இன்னும் சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்ட்யா, செர்பிய நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டு ஹர்திக் பாண்ட்யா குழந்தை பிறந்ததை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் டாக்டர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்த படத்தையும் இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அதில் ‘‘என்னுடைய குழந்தையை இந்த உலகத்திற்கு காட்டிய மருத்துவர்களுக்கு நன்றி, எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்’’ எனத்தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.