ஆல்ரவுண்டர் கிரிக்கெடரான ஹர்திக் பாண்டியா அப்பாவானார்… வெளியான புகைப்படம்.. குவுயும் வாழ்த்துக்கள்!

ஹார்டிக் பாண்ட்யா ஒரு இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார். இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார். அவர் ஒரு அவர் வலது கை பேட்ஸ் மற்றும் வலது கை வேகமாக-நடுத்தர பந்து வீசுகிறார். இவரது மூத்த சகோதரர் கிருனல் பாண்ட்யாவும் சர்வதேச கிரிக்கெட் வீரர். இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கும், செர்பிய நாட்டு நடிகை நடாஸா ஸ்டான்கோவிக்கிற்கும் இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து இவர்கள் இருவரும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்தி வந்தனர். மேலும், மே 31ஆம் தேதி அன்று ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் நடாசா கர்ப்பமாக இருப்பதை ஹர்திக் பாண்டியா அறிவித்திருந்தார். அதில், “நடாசாவும் நானும் சேர்ந்து வாழ்க்கையில் ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம், அது இன்னும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

எங்களுடைய வாழ்க்கையில் புதிய ஒரு உறவை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களுடைய ஆசிர்வாதங்களுடன் புதிய வாழ்க்கையில் நாங்கள் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து, தற்போது அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்..

 

Leave a Reply

Your email address will not be published.