இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கும், செர்பிய நாட்டு நடிகை நடாஸா ஸ்டான்கோவிக்கிற்கும் இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து இவர்களது திருமணம் ஒரு சில மாதங்களில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் திருமணம் தள்ளிப்போனது.

இதையடுத்து, திருமணம் தள்ளிப் போனாலும் நடாஷா கர்ப்பம் ஆனதாக ஹர்திக் பாண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும் கர்ப்பிணியாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவ்வப்போது அவர் பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த ஜூலை 30ம் தேதி ஹர்திக் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”என்னுடைய இரண்டு ஏஞ்சல்ஸை மிஸ் பண்றேன். என்னுடைய வாழ்க்கையில் உங்கள் இருவரையும் பெற நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். என கூறி மனைவி , மகனுடன் வீடியோ காலில் பேசிய ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டுள்ளார்”. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது.