விஜய் டிவியில் பிரபலமான ராஜா ராணி என்ற சீரியலில் பிரபலமானவர் ஆல்யா மனசா. சீரியலில் நடித்து இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்டியால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஆலியா எந்த சீரியலும் நடிக்காமல் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். குடும்பம் சம்மதிக்காததால் இருவரும் திருமணம் செய்து பின்பு ஆல்யா கர்ப்பமான பின்பு அவரது குடும்பத்தினருடன் சேர்ந்தார்.

லாக்டவுனில் ஆலியாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆலியா – மானசா ஜோடி அடிக்கடி குழந்தையுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். அதில், ஆல்யாவை போலவே அவரின் செல்ல மகளும் க்யூட் ரியக்ஸன் கொடுக்கின்றார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். புலிக்கு பொறந்தது பூனையாகுமா ஒரு காலத்தில் ஆலியாவை போல அவரின் மகளும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பார்.
அது மாத்திரம் இல்லை, காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆல்யா மற்றும் சஞ்சிவ் ஆகியோர் மகளுடன் இருக்கும் ஒவ்வொரு அழகிய தருணத்தினையும் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளுவார்கள். அண்மையில் குழந்தையுடன் வெளியிட்ட காணொளி கூட இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்திருந்தது.