ஆல்யாவின் ராஜா ராணி 2 இந்த ஹிந்தி சீரியலின் ரீமேக்கா கதையா? வெளியான தகவல்..

சமீபகாலமாக சீரியல் மோகம் அனைவரிடமும் அதிகரித்து வருகின்றது. முன்பு உள்ள சீரியல் போல் அழுகை, வில்லத்தனம் என்று இல்லாமல் தற்போது காதல், கல்லூரி, பிரெண்ட்ஷிப் என பல கதைகளை சீரியலில் கொண்டு வருவதால் சீரியல் மோகம் அனைவரிடமும் அதிகரித்துள்ளது. எல்லாவித வயது ரசிகர்களையும் சீரியல் ஈர்த்துள்ளது. சீரியல்கள் கொரோனா காலத்தில் படு பிரபலமாக ஓடுகிறது. இடையில் எல்லா சீரியல்களும் நிறுத்தப்பட வீட்டில் இருக்கும் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

இப்போது சில சீரியல்கள் அப்படியே தொடர்ந்து ஓட, சில சீரியல்கள் புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆலியா சஞ்சீவ் நடித்த ராஜா ராணி சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஆல்யா மானசா நடிப்பில் ராஜா ராணி 2 சீரியல் உருவாக இருக்கிறது. அதற்கான புதிய புரொமோ அண்மையில் வெளியானது.

நாயகன் சமையல்காரன், படிக்காதவன், நாயகி போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவில் இருப்பவள். புரொமோ வெளியானதும் இது ஹிந்தி சீரியலான தியா ஆர் பாட்டி ஹம் கதை என்று கூறிவருகின்றனர். இந்த ஹிந்தி சீரியலை தமிழில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் இதே தொலைக்காட்சி தமிழில் டப் செய்து ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.