ஆல்யா மனசா பிரபல தமிழ் தொலைக்காட்சியின் சீரியல் நடிகை. விஜய் டிவியில் பிரபலமான ராஜா ராணி என்ற சீரியலில் ‘செம்பா’ வேடத்தில் நடித்து பிரபலமானவர். 2018 ஆம் ஆண்டில், சஞ்சீவுடன் ‘என்னாய் மாட்ரம் கதலே’ என்ற குறும்படத்தில் தோன்றினார். சீரியலில் நடித்து இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்டியால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் பெற்றோரிடம் காதலை கூறும்போது சஞ்சீவ் வீட்டில் மற்றும் இவர்கள் காதலை ஏற்றுக்கொண்டனர். ஆலியா வீட்டில் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஆலியா எந்த சீரியலும் நடிக்காமல் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
குடும்பம் சம்மதிக்காததால் இருவரும் திருமணம் செய்து பின்பு ஆல்யா கர்ப்பமான பின்பு அவரது குடும்பத்தினருடன் சேர்ந்தார். லாக்டவுனில் ஆலியாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தை பெற்று சில மாதங்களில் குழந்தையை வைத்து பல காணொளிகள், புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தையை வைத்து புகைப்படம் எடுத்திருக்கும் ஆல்யா, குழந்தையின் தலையில் இருபுறமும் சுருள் முடி இருப்பது போன்று புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.