ஆறு படத்தில் சூர்யா த்ரிஷாவை விட மிகவும் பிரபலமானவர் என்றால் சவுண்டு சரோஜா கதாபாத்திரம் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கலக்கியவர் ஐஸ்வர்யா. அவர் பிரபல நடிகை லட்சுமியின் மகள். சூர்யா-ஹரி கூட்டணியில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஆறு. அதிரடி திரைக்கதையில் உருவாகியிருந்த இந்த படம் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு ஒரு நல்ல திருப்பு முனையாக அமைந்தது.

ஐஸ்வர்யா சினிமாவில் நல்ல உச்சியில் புகழ்ச்சியில் இருக்கும்போது 1994 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு ஒரு வருடத்தில் பெண் குழந்தை பெற்ற பிறகு அவர் கணவருடன் விவாகரத்து பெற்றார். விவாகரத்துக்கு பிறகு போதைக்கு அடிமையான ஐஸ்வர்யா அதிலிருந்து மீண்டு வர பல காலம் ஆகி விட்டதாம். சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தியதால் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் யூ-டியூபில் சவுண்ட் சரோஜா எனும் பெயரில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்த கலகலப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த சேனலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சினிமாவில் வாழ்ந்து கெட்டவர்கள் எனும் பட்டியலில் இவரும் இணைந்து விட்டாராம். இருந்தாலும் தற்போது எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய பாதையில் சரியாக சென்று கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா.