ஆரியைப் போல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட பாலாஜி முருகதாஸ்! அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி இந்த சீசனில் டைட்டில் வின் செய்தார். இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்று இருந்த பாலாஜி முருகதாஸ், தன் கடந்தகாலம் பற்றி அனைவரும் பரிதாபப்படும்படி கூறினார். குறிப்பாக அவரது பெற்றோர் பற்றியும் இதில் பேசியிருந்தார். இந்நிலையில் பாலாஜி முருகதாஸ், ஒரு நட்சத்திர ஹோட்டலில் பீரை தன் மேல் ஊற்றி குளிப்பது, நீச்சல் குளத்தில் அரைகுறை உடையில் இருக்கும் இளம்பெண் ஒருவரை அலேக்காக தன் கையாலேயே தூக்கி உடற்பயிற்சி செய்வது ஆகிய வீடியோக்கள் வெளியானது.

இதனால் பாலாஜி முருகதாஸே மோசமான குணங்களைக் கொண்டவர் தான் என நெட்டிசன்கள் வறுத்து எடுத்தனர். கடந்த 2018ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் இல்லத்தில் கலவையான விமர்சனத்தைப் பெற்றார். பிக்பாஸ் சீசனில் பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடம் பிடித்தார். ஆரி, சினிமா மட்டுமல்லாது ஜல்லிக்கட்ட் பிரச்னை, சென்னை பெருவெள்ளம், விவசாயிகள் பிரச்னையின் போதும் குரல் கொடுத்தார்.

அது மட்டும் இல்லாமல் ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்னும் அறக்கட்டளையையும் நிறுவி ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து வருகிறார். ஆரியைப் போல் பாலாஜியும், ஜல்லிக்கட்டுக்கு போராடி இருக்கிறாராம். பாலாஜி, ஜல்லிக்கட்டுக்காக போராடியிருக்கும் அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே, பாலாஜியும் ஜல்லிக்கட்டுக்கு போராடியிருக்கிறாரே என கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.