ஆரியிடம் கேள்வி கேட்ட கேப்ரில்லாவின் அம்மா! பரபரப்பில் போட்டியாளர்கள்- வெளியான ப்ரோமோ 1

87 நாட்களை கடந்து விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நோக்கி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் இனி யார் யார் அடுத்தடுத்து வெளியேற போவர்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதையடுத்து, தற்போது சென்றுகொண்டிருக்கும் ஃப்ரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் உள்ளே வந்து சர்ஃப்ரைஸ் கொடுத்துவிட்டு சென்றனர்.

முதலில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஷிவானியின் தாயார் நுழைந்தார். நுழைந்து சிறிது நேரத்திற்குள்ளே ஷிவானியை கண்டப்படி பேசி தள்ளினார். அதனால் பிக் பாஸ் வீட்டில் அணைத்து போட்டியாளர்களும் சற்று பயந்தே இருந்தனர். அதன் பின்னர் பாலாவின் அண்ணன் வந்து குதூகலமாக பேசி வீட்டையே கலகலப்பாக மாற்றி சென்றார். நேற்று ரம்யா, சோம் மற்றும் ரியோவின் குடும்பத்தினர் வந்து சென்றார்.

இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் கேப்ரில்லாவின் தாய் உள்ளே நுழைந்தார். பின்னர், ஆரியிடம் பேசும் போது உங்களை நான் நெடுஞ்சாலை படத்தில் பார்த்திருக்கேன் என பேசிவிட்டு, பின்னர் கேபியிடம் நீ டாஸ்க் பண்ணற ஆனா அதுலயும் தனிப்பட்ட முறையில் செய் என கூற, அதற்கு கேபி இங்க இருக்க போட்டியாளர்கள் எல்லோருக்கும் நல்லா பண்ணாலும் கண்ணு தெரிய மாட்டிக்குது என கூறியுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *