ஆரிக்கு கேக் ஊட்டி மகிழ்ந்த பாலா! இரவு பார்ட்டியில் கலந்துகொண்ட முன்னால் பெண் போட்டியாளர்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்காவது சீசனையும் நிறைவு செய்து இருக்கிறது. இந்த சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின் செய்தார். அதில் பாலாஜி இரண்டாம் இடம் பிடித்தார். வழக்கமாகவே பிக்பாஸ் ஒவ்வொரு சீசன் முடிந்த பின்பும், கமலஹாசன் அந்த சீசனில் பங்கேற்றோரையும், அதற்கு முன்பு நடந்த சீசன் போட்டியாளர்களையும் அழைத்து சச்கஸ் பார்ட்டி கொடுப்பார். அதில் பாலா ஆரி உட்பட அனைவருக்கும் கேக் ஊட்டி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேபோல் இதில் லாஸ்லியாவும் கலந்துகொண்டுள்ளார். லாஸ்லியாவின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோனார். அந்த சோகத்திலேயே மூழ்கிப் போய் இருந்தார் லாஸ்லியா. அதற்குப் பின் முதன் முதலாக இந்த நிகழ்ச்சியில் தான் பங்கெடுத்துள்ளார் லாஸ்லியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *