தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா? என்று பேசப்பட்ட நிலையில், அண்மையில் ஸ்டைலிஷான லுக்கில் கமல் ஹாசன் எண்ட்ரி கொடுக்க சூப்பராக வெளியான புரமோ வீடியோ பலரையும் கவர்ந்தது. லாக் டவுன் பரிதாபங்களும் அதில் இடம்பெற்றிருந்தது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது ஒளிப்பரப்ப படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிய மூன்று சீசன்களும் ரசிகரகளிடையே பெரிய அளவில் பிரபலமானது. மேலும் தற்போது பிக்பாஸ் 4வது சீசனும் தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அவளோடு உள்ளனர். பிக்பாஸ் சீசன் 4 தொடங்கிவிட்டது. தெலுங்கில் சீசன் 4ன் நிகழ்ச்சி டிவி அண்மையில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. இதில் தற்போது பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு பெரிதளவில் ஸ்டார் வேல்யூ இல்லாததால் நிகழ்ச்சியின் தொடக்கமே உற்சாகம் இல்லாமல் காணப்படுகிறதாம்.
இந்நிகழ்ச்சி குறித்த பரபரப்பும் இல்லாததால் மக்கள் மத்தியில் நன்கு முகம் தெரிந்த பிரபலங்களை உடனடியாக போட்டியாளர்களாக வைல்டு கார்டு எண்ட்ரி வழியாக அனுப்பு முடிவு செய்துவிட்டார்களாம். இதற்காக முக்கிய நடிகர்கள், நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.