ஆரம்பமே இப்படியா!! பிக்பாஸ் குழுவினருக்கு வந்த சோதனை… வைரலாகும் பதிவு

தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த மூன்று சீசன்களை போல் இந்த சீசனும் கமல் தான் தொகுப்பாளராக உள்ளார். அண்மையில் ஸ்டைலிஷான லுக்கில் கமல் ஹாசன் எண்ட்ரி கொடுக்க சூப்பராக இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியானது. இந்நிலையில் மூன்றாம் ப்ரோமோ இந்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என இதுவரை யாருக்கும் தெரியவில்லை, அதுவே பெரிய டென்ஷனாக ரசிகர்களுக்கு உள்ளது. இதில் வேறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நீங்களே இந்த 4வது சீசனில் கலந்து கொள்ள போகிறவர்களை கண்டுபிடியுங்கள் என்று வேறு வீடியோ வெளியிடுகிறார்கள். மக்கள் எப்போதும் தான் போட்டியாளர்கள், நிகழ்ச்சி ஒளிபரப்பு தேதி கூறுவீர்கள் என்று கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் பிக்பாஸ் குழுவினர் ஒருவருக்கு ரசிகர் வாட்ஸ் அப் செய்து பிக்பாஸில் யார் யார் வருகிறார்கள் என்பதை கூறு என கேட்க எனக்கு தெரியாது என எதிர் ஆள் பதில் சொல்ல, நிஜமாகவே நீ விஜய் டிவியில் தான் பணிபுரிகிறாயா என ரசிகர்கள் கேட்கிறார். இதனை அவர்களே அட்மினுக்கு வந்த சோதனை பாருங்க என அந்த மெசேஜை பதிவு செய்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.