ஆரம்பமான புதிய சண்டை! ரம்யா, ஷிவானியை கோவப்படுத்திய ரியோ- வெளியான முதல் ப்ரோமோ..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் சென்ற வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார், என்பது அனைவரும் அறிந்ததே. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், போட்டியில் சுவாரசியம் குறைவாக காணப்பட்ட போட்டியாளரான நடிகை ரேகா வெளியேறினார்.

இப்போது பிக்பாஸ் 4வது சீசன் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடந்த நிலையில், இந்த வாரம் ஃபேஷன் டிரெஸ் காம்பெட்டிஷன் போல நாடக டாஸ்க் அரங்கேறியது. நாடா? காடா? என்ற இந்த டாஸ்க்கில் இரண்டு குழுக்கலாக பிரிந்து போட்டியாளர்கள் அனைவரும் ரணகலப்படுத்தியிருந்தனர். இதில் சுரேஷ் செய்த சேட்டைகளுக்கு அளவே இல்லை.

அடுத்தடுத்து டாஸ்க் பிக்பாஸ் கொடுக்க சண்டைகள் வீட்டில் அதிகமாகி வருகிறது. இதுநாள் வரை சுரேஷ்-அனிதா சம்பத், ரியோ-சுரேஷ், ஆரி-பாலாஜி போன்றோருக்கு தான் சண்டைகள் இருந்து வந்தது. இன்று காலை வந்த புதிய புரொமோவில் ரியோ மற்றும் ரம்யா பாண்டியனுக்கு வாக்குவாதம் நடக்க சண்டையாக மாறுகிறது. ரம்யா பாண்டியனும் மிகவும் டென்ஷனாக பேசுகிறார், இதோ அந்த புரொமோ வீடியோ,

Leave a Reply

Your email address will not be published.