ஆபாச சேட்டிங்..வெளிநாட்டு பெண்ணுடன் நெருக்கம்! கெளசல்யா 2-வது திருமணம் செய்த சக்தியைப் பற்றி அம்பலமான தகவல்

தமிழகத்தில் காதல் கணவனை ஆணவப்படுகொலையால் இழந்த கெளசல்யாவின் இரண்டாவது திருமணம் ஏராளமான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2016-ஆம் ஆண்டு சங்கர்-கௌசல்யா ஜோடி ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதன் காரணமாக உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் விரட்டி விரட்டி வெட்டப்பட்டனர்.

இதில் சங்கர் பரிதாபமாக பலியாக, சிகிச்சை மூலம் கெளசல்யா உயிர்பிழைத்தார். அப்போது அவர் சங்கர் கொலைக்குக் காரணமானவர்களை விடமாட்டேன் என தன் தந்தை உள்ளிட்ட ஆறு பேருக்குத் தண்டனை பெற்றுத் தந்தார்.

அதன் பின் பறை இசைக்கக் கற்றுக்கொண்டு, சங்கர் தனிப் பயிற்சி மையம் என்ற பெயரில் பறை பயிற்சி வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தார். சங்கர் சமூக நீதி அறக்கட்டளையைத் தொடங்கி சமூகச் செயல்பாடுகளிலும் ஈடுபட ஆரம்பித்தார்.

இந்நிலையில் கடந்த 9-ஆம் திகதி சக்தி என்பவரை கெளசல்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.இந்த திருமணத்திற்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தாலும், கெளசல்யா இன்று இரண்டாது திருமணம் செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சங்கர் சமூகநீதி அறக்கட்டளையை நிர்வகித்து வந்த ஜீவானந்ததிடம் பிரபல தமிழ் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது.அதில், கௌசல்யா மறுமணம் செய்துகொள்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவர் யாரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பது தான் வேதனையாக உள்ளது.

சங்கரின் இடத்தில் யாரை வைத்துள்ளார் என்பதை தாங்க முடியவில்லை. கௌசல்யாவின் அரசியலுக்கு நான் உடனிருந்து உதவி வந்தேன்.

 

ஜீவானந்தம்

மேலும் தற்போது கெளசல்யா திருமணம் செய்திருக்கும் சக்தி பறை கற்க வந்த ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலித்த விஷயம், கலையகத்துக்குள் இருக்கும் பெண் தோழர்கள் மூலமாக எனக்குத் தெரியவந்தது. அந்தப் பெண்ணும் சக்தியை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.

இந்நிலையில் வெளிநாட்டு பெண் ஒருவர் ஸ்கைப் மூலம் சக்தியிடம் பறை இசை பயின்று வந்தார். அவருடன் சக்தி நெருங்கி பழக ஆரம்பித்தார்.விவாகரத்தான அப்பெண்ணுக்கு குழந்தை இருக்கிறது. இன்னொரு பெண்ணுடனும் பழகிக் கொண்டே, வெளிநாட்டுப் பெண்ணையும் சக்தி ஏமாற்றுகிறார் என்பது கலையகத்தில் உள்ள சில பெண்களுக்குத் தெரிந்ததால், பிரச்சனை வெடித்தது.

இது தெரிந்ததும் பறை கற்க வந்த பெண், சக்தியிடம் சண்டையிட்டு விலகிவிட்டார். உண்மை தெரிந்து வெளிநாட்டுப் பெண்ணும் நாடு திரும்பிவிட்டார்.இது போன்ற சூழல் இருக்கும் போது தான், கலையகத்தில் இருந்த பெண் ஒருவரை அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, சக்தி பாலியல் ரீதியாக தீண்டியதாக சர்ச்சை வெடித்தது.

இறுதியில் அந்த பெண் மீது பழியைப் போட்டு பிரச்சனையை திசை திருப்பிவிட்டனர். பெண் விடுதலை, மண் விடுதலை என்று மேடையில் முழங்கும் சக்தி பெண்களை இப்படி ஏமாற்றுவது தெரிந்ததும், கலையகத்திலிருந்து பலரும் வெளியேற ஆரம்பித்தார்கள்.

இதனால் இந்த பிரச்சனையை மறைப்பதற்காக சக்தியை கலையகத்திலிருந்து சில மாதங்கள் நீக்கினர். அதன் பின் மீண்டு நிர்வாகிகள் சிலர் அவரை சேர்த்துக் கொண்டனர்.இப்படி சென்று கொண்டிருக்கும் நிலையில் கெளசல்யா, சக்தியை காதலிக்கும் விடயம் தெரியவர, அவரை காப்பாற்றுவதற்கு பலரும் போராடினோம்.

அப்போது தான் சக்தி திருநங்கைஒருவரிடம் ஆபாசமாக வீடியோ சேட்டிங் செய்ததது ஆதாரத்துடன் கலையகத்தில் இருக்கும்உள்ளவர்களுக்கு வந்தது.ஆனால் அதை சக்தியிடமேகொடுத்துவிட்டார்கள். சக்தியோ கெள்சல்யாவிடம் கொடுக்க, அவர் திருநங்கைக்கு திருப்பி அனுப்பி இந்தப் பிரச்னையை வெளியில்சொல்லாதீர்கள் என்று கூறியுள்ளார்.

 

கெளசல்யாவிடம் நான் இது குறித்துபேசிய போது, அவர் எனக்கு சக்தி தான் முக்கியம்என்று கூறினார்.அரசியல் நிலைப்பாட்டுக்காகத்தானேஇவ்வளவு காலம் இங்கு பணியாற்றினோம். அதுவே இல்லையெனும்போது எதற்கு அங்கு இருக்கவேண்டும் என்று நான் வெளியேறிவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் சக்தியை காதலித்த பெண்ணும், கெளசல்யாவும் நெருக்கமானவர்கள் தான். தன் காதல் பிரச்சனையைப் பற்றி கௌசல்யாவிடம் அந்த பெண் ஆரம்பத்தில் கூறிய போது, நான் சக்தியை ஏற்கனவே பதிவு திருமணம் செய்துவிட்டேன் என்று கெளசல்யா கூறியுள்ளார்.

ஆனால் அது பொய் ஒரு பெண்ணின் காதலைக் கொச்சைப்படுத்தி, தன் காதலை கெளசல்யா நியாயப்படுத்துவது வேதனையாக உள்ளது. ஒருநாள் நிச்சயமாக உண்மையை உணர்வார் என்று கூறியுள்ளார்.இது குறித்து சக்தியிடம் கேட்ட போது, இது தொடர்பாக எதையும் பேச விரும்பவில்லை என்று மறுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.