ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..! தெய்வத்திருமகள் சாரா வளர்ந்து ஹீரோயின் மாதிரி ஆயிட்டாங்களே…

தெய்வத் திருமகள் சாராவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. அந்த சின்னஞ்சிறு குழந்தையின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அந்த சாரா இப்போது வளர்ந்து ஹீரோயின் போல் இருக்கிறார். அவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலும் ஆகிவருகிறது.

பேபி சாரா சிறுவயதில் இருந்தே ஹிந்தி விளம்பரப்படங்களிலும், குறும்படங்களிலும் நடித்திருந்தார். . இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் மனநலம் குன்றிய அப்பா பாத்திரத்தில் வரும் விக்ரமின் மகளாக சாரா அசத்தியிருப்பார். அந்த ஆண்டின் குழந்தைகளுக்கான அனைத்து விருதுகளையும் சாராவிற்கே அள்ளினார்.

தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சைவம் படத்திலும் நடித்திருந்தார். தொடர்ண்டு வந்த விழித்திரு படத்திலும் முக்கியப் பாத்திரத்தில் தோன்றினார் சாரா. தமிழில் கடைசியாக சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்திருந்த சாரா இப்போது ஆள் அடையாளமே தெரியாமல் வளர்ந்துவிட்டார். அதிலும் இப்போது ஹூரோயின் போல் இருக்கும் சாரா அடிக்கடி தான் மாடர்ன்ம் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இதைப் பார்ப்பவர்கள் அடடே குழந்தையாகப் பார்த்த சாராவா இது என ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர். அவரது புகைப்படமும் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *