ஆங்கிலம் பேசத் தெரியாத மேனேஜரை கேலி செய்த இளம்பெண்கள்.. வெளியான வீடியோ.. தி ட் டி தீ ர் க்கும் நெட்டிசன்கள்

‘’ஆங்கிலம் என்பது மொழிதானே தவிர அறிவு இல்லை’’ என்பது நம்மவர்கள் பலருக்கும் தெரிவது இல்லை. அதனால் தான் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்களைப் பார்த்தால் நம்மையும் அறியாமல் கூடுதல் மரியாதை கொடுக்கிறோம். ஆங்கில மோகத்தில் இளம்பெண்கள் இருவர் செய்த கேலி அவர்களுக்கே எதிராகத் திரும்பியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் பிரபலமான உணவகத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் கன்னொளி பை கஃபே சோல் என்ற உணவகத்தில் மேலாளராக இருப்பவர் ஒழுங்காக ஆங்கிலம் பேசத் தெரியாமல் தவிப்பதை அதன் உரிமையாளர்களே வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இது இணையத்தில் லைக்ஸைக் குவிக்கும் என நினைத்து செய்தனர். ஆனால் அதற்கு மாற்றாக கண்டணங்களைக் குவித்திருக்கிறது. நெட்டிசன்களின் காட்டமான விமர்சனத்தைத் தொடர்ந்து உணவகத்தின் உரிமையாளர்கள் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.