ஆங்கிலத்தில் அழகாக பேசி அசத்தும் கிளி.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி!

ஒருவர் ஒரே விசயத்தை திரும்ப, திரும்பப் பேசினால் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படி சொல்வதுபோலவே கிளி நன்றாக பேசக் கூடியது. அந்த வகையில் மனிதர்களுக்கு இணையாக கிளிகளும் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் பேசக் கூடியவைதான். ஒரு விசயத்தை சொல்லிக்கொடுத்தால் ஞாபகமாக வைத்திருக்கும். அப்படியே சொல்லியும் காட்டும். இங்கேயும் அப்படித்தான். ஒருவர் தன் வீட்டில் கிளி வளர்க்கிறார். அந்தக் கிளியானது குட்டி போட்டுள்ளது. வழக்கமாகவே பயிற்சி எடுத்துக்கொண்டு நன்றாக பேசும் கிளியானது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் புதிதாக பிறந்த தன் குட்டிகளிடம் பேசுகிறது. தன் குட்டிகளை நோக்கி, ‘ஐ லவ் யூ பேபீஸ், குட் மார்னிங்…என்றெல்லாம் சொல்லும் கிளி..கடைசியில் கிஸ் யூ என்றவாறே தன் குட்டிகளுக்கு முத்தமிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published.