தென்னிந்தியத் திரைப்பட துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அர்ஜுன். இவரது தந்தை ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் 90களின் துவக்கத்தில் தமிழ் திரையுலகில் ஹீரோவாக கொடி கட்டி பறந்தவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.
இவருக்கு “ஆக்சன் கிங்” எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவரது முதல்வன் படம் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருந்தது. இவரின் ஜென்டில்மேன், ஜெய் ஹிந், குருதிப்புனல், கர்ணா என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழ் ரசிகர்களிடையே ஆக்ஷன் கிங் அர்ஜுன் என்று எப்போதுமே தனி இடம் உண்டு. அர்ஜுன் மகள் தமிழில் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தற்போதும் ஒரு சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து கொண்டிருக்கின்றார். ஹீரோ படத்தில் சிவர்கார்த்திகேயனுடன் இணைந்து நடித்து ஆக்ஷன் கிங் அசத்தியிருப்பார். இந்நிலையில், ரசிகர்கள் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வீட்டின் புகைப்படங்களை பார்த்து பிரம்மித்து போயுள்ளனர். அப்படி என்ன தான் இருக்கின்றது என்பதை வாங்க பார்க்கலாம்.