அவளை சீரழிச்சிட்டாங்க…அன்று பண்ணை வீட்டில் பலமணி நேரம் நடந்தது என்ன? பொள்ளாச்சி மாணவியின் உறவினர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர் ஒருவர் நடந்த சம்பவம் குறித்த முழுவிவரத்தினை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி மிகவும் சாந்தமானவர். மாணவியும், பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த சபரிராஜன் என்பவரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே நண்பர்கள் ஆவார். இந்நிலையில் தனது பிறந்தநாள் பார்ட்டிக்கு சபரிராஜன், மாணவியை அழைத்துள்ளார். முதலில் ஹொட்டலில் பார்ட்டி தருவதாக கூறி காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர், ஹொட்டலுக்கு செல்லாமல் நேராக திருநாவுக்கரசின் பண்ணை வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு, திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி, இவர்கள் எல்லாரும் யார் என கேட்டுள்ளார். அதற்கு சபரிராஜன் அவர்கள் அனைவரும் எனது நண்பர்கள், நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இங்கு சாப்பிட்டு பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடலாம் என தெரிவித்துள்ளார். அப்போதுதான், நான்கு பேர் கும்பலுக்கும் காமவெறி தலைக்கேறி, மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

வலுக்கட்டாயமாக மாணவியின் மேலாடையை கழற்றி ஆபாச வீடியோ எடுத்துள்ளனர். மாணவியிடமிருந்து 2 பவுன் செயின் மற்றும் மொபைல் போனையும் பிடுங்கிக்கொண்டனர். பலமணிநேரம் அவளை துன்புறுத்தி அதன்பிறகு அவளை மிரட்டி அனுப்பியுள்ளனர். இந்த வீடியோவை அவரிடம் காண்பித்து, அவரை மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.

இது தாங்கமுடியாமல் கதறிகொண்டே எங்களிடம் நடந்தவை குறித்து தெரிவித்தாள். இதனால், ஆத்திரம் அடைந்த நாங்கள், ஊர்க்காரர்கள் 10 பேருடன் திருநாவுக்கரசு பண்ணை வீட்டுக்கு சென்றோம். அங்கு, பதுங்கியிருந்த திருநாவுக்கரசு உள்பட 4 பேரையும் அடித்து உதைத்தோம். தற்போதும்கூட ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர் இவர்களுக்கு ஆதரவாக இருப்பதால் நடந்தவற்றை முழுமையாக கூற இயலவில்லை என கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.