அழுகிய நிலையில் ரஜினி பட நடிகர் மரணம்! இறப்பில் மர்மம், விசாரணையில் போலீஸ்

ரஜினியின் நடிப்பில் கடந்த 1994ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் வீரா. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக இந்தி நடிகர் மகேஷ் ஆனந்த் என்பவர் நடித்திருந்தார். இவர் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர். மும்பையில் வசித்து வரும் இவர் பட வாய்ப்பு இல்லாமல் கடந்த 18 ஆண்டுகளாக தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்த வந்தார். கடந்த ஆண்டில் மட்டும் ஒரு படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் வழக்கம்போல் காலையில் வீட்டு கதவை தட்டியுள்ளார். திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்த போது அங்கு அழுகிய நிலையில் மகேஷ் ஆனந்த் பிணமாக கிடந்துள்ளார்.

அவருக்கு அருகில் சில மது பாட்டில்கள் கிடந்துள்ளன.  மரணம் மர்மமான முறையில் நடந்துள்ளதால் போலீஸார் விசாரணையை தொடர முடியாமல் முடுக்கி விட்டுள்ளனர்.

மகேஷ் ஆனந்த், ரஜினியின் வீரா படத்தில் மட்டுமில்லாமல் விஜய்காந்தின் பெரிய மருது போன்ற பல படங்களின் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.