அலைபாயுதே படத்தில் நடித்த நடிகை சொர்ணமால்யாவா இது? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

சின்னத்திரையில் மிகச்சிறந்த தொகுப்பாளராக ஒரு கட்டத்தில் வலம் வந்தவர் சொர்ணமால்யா. இவரது பேச்சுக்கு பலர் மயங்கி அவரது ரசிகையாக மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு தனது படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். சின்னத்தொலைக்காட்சியில் பயணித்து வந்த இவருக்கு சினிமா வாய்ப்பை கொடுத்து அழகு பார்த்தவர் மணிரத்தினம். அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அடியெடுத்து வைத்தார் சொர்ணமால்யா.

அதன்பின் எங்கள் அண்ணா, மொழி போன்ற பல்வேறு படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் மனதில் குடியேறினார். இவர் பெரும்பாலும் இழுத்துப் போர்த்துக் கொண்டு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில படங்களில் சற்று கவர்ச்சியாகவும் நடித்துள்ளார் அந்த வகையில் சாரி எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு, அழகு நிலையம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் இவருக்கு அக்கா, சித்தி, தங்கை போன்ற ரோல்களே பெரிதும் கிடைத்தால் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகினார். அதிலும் திருமணம் செய்த பின் முற்றிலுமாக சினிமாவுக்கு முழுக்கு போட்டார். பல வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக ஆகி வருகிறார் சொர்ணமால்யா. இவர் ஆரம்பத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.