அறுவை சிகிச்சைக்கு பின்னர் கமல்ஹாசன் எப்படி இருக்கிறார் தெரியுமா? மகள்கள் வெளியிட்ட உண்மை தகவல்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அதற்கு அறுவை சிகிச்சை செய்து இருந்தார். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்த காலில் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காலில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும், சில நாட்கள் ஓய்வு எடுக்கப்போவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம், குறித்த அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளது. விரைவில் குணமடைந்து வருவார் என்று கூறியுள்ளது. இதற்கிடையே கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதி, அக்சரா ஆகியோரும் அறுவை சிகிச்சை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக, உற்சாகமாக இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார், மகிழ்விப்பார். அனைவரது அன்பிற்கும், பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!