அறிந்தும் அறியாமலும் பட சமிக்‌ஷாக்கு இரண்டாம் திருமணம்! வைரலாகும் மாப்பிள்ளை புகைப்படம்!!

அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சமிக்‌ஷா. பின் மனதோடு மழைக்காலம், மெர்க்குரி பூக்கள், தீ நகர், பஞ்சாமிர்தம், கார்த்திகை ஆகிய படங்களில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு தொடர்களிலும் படங்களிலும் அவர் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.


கடந்த 2012 க்கு பிறகு அவர் பஞ்சாபி படங்களிலும், டிவி சீரியல்களில் மட்டும் நடித்து வந்தார். கடந்த வருடம் ஹிந்தியில் பிரணாம் என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த ஜூலை 3 ம் தேதி சிங்கப்பூரை சேர்ந்த பாடகர் மற்றும் தொழிலதிபர் ஷயீல் ஓஸ்வாலை காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவருக்குமே இது 2 ம் திருமணம். முதல் திருமணம் தோல்வியான பின் திருமணம் வேண்டாம் என இருவரும் முடிவு செய்து வைத்திருந்தார்களாம்.

ஷயீலுக்கு சோஹன்னா (வயது 17), ஷிவம்( வயது 16) இரண்டு குழந்தைகளும், சமிக்‌ஷாவுக்கு அமேபிர் என்ற 10 வயது மகனும் இருக்கிறார்களாம். 2014 ல் திருமணம் ஆன சமிக்‌ஷா 2018 ல் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரிலேயே வாழ விரும்புவதால் சினிமாவுக்கு டாட்டா சொல்கிறாராம். விரைவில் மாமனார் தொடங்கிய பட நிறுவனத்தின் மூலம் கதை, இயக்கம் என களத்தில் இறங்கப்போகிறாராம் சமிக்‌ஷா.

 

View this post on Instagram

 

Just LOVE @itsshaeloswal ❤️ Thanks for this overwhelming response #TereNaal #TereNaalShael

A post shared by Sameksha (@iamsameksha) on

Leave a Reply

Your email address will not be published.