சேலம் : சேலம் பெண்கள் கிளை சிறை அதிகாரிகள் நிர்வாணப்படுத்தி “ப்ளு பிலிம் ‘ எடுப்பதாகக் கூறி, அரை நிர்வாணமாக ரோட்டில் நின்று தகராறில் ஈடுபட்ட பெண் கைதியால், பரபரப்பு ஏற்பட்டது. சேலம், பெரியகொல்லப்பட்டியை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் மைதிலி(25). இவரது கணவர் சரவணன். மைதிலி மீது, அரூர், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட இடங்களில், திருட்டு வழக்கு உள்ளது. ஆறுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்கில் சிக்கிய மைதிலியை, போலீசார் கைது செய்து, அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மைதிலியை, அவரது தாய் சாந்தி அடிக்கடி பார்த்து செல்வது வழக்கம்.

சில வாரங்களுக்கு முன் சாந்தி, பெண்கள் கிளை சிறைக்கு வந்து மகள் மைதிலியை சந்தித்தார். சிறைக்குள் பெரிய பொட்டலம் விழுந்தது. “பாரா’ சென்ற காவலர்கள் பொட்டலத்தை பிரித்து பார்த்து போது, அதில் “ஹான்ஸ், பான்பராக், புகையிலை’ உள்ளிட்ட போதை வஸ்துகள் இருந்தன.
கிளை சிறைக்கு வெளியே சுற்று சுவருக்கு பின்னால் இருந்து, சாந்தி போதை வஸ்து பொட்டலம் போட்டதை போலீசார் கண்டு பிடித்தனர். சிறைக்குள் உள்ள மகள் மைதிலி மூலமாக போதை பொருட்களை விற்பனை செய்ய, சாந்தி சுற்றுச் சுவருக்கு வெளியே இருந்து பொட்டலம் வீசியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. சிறைக்குள் விதி முறை மீறி போதை வஸ்து பொட்டலம் வீசிய சாந்தியை, போலீஸார் கைது செய்து கிளை சிறையில் அடைத்தனர். மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள வீடியோ பார்க்கவும்.