மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார் மோகன்லால். அப்படி தான் இவர் நடிப்பில் சமீபத்தில் பல படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த வெளிவந்த லூசிபர். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும் வசூலில் கிட்டத்தட்ட 175 கோடி வசூல் செய்தது.

இப்படத்தில் பிரிதிவிராஜ், மஞ்சு வாரியோர், விவேக் ஓபராய், இந்திரஜித் என பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய தற்போது முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிகவுள்ளராம்.
மேலும் தற்போது இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என பட குழுவினர் எண்ணி வந்த போது, நடிகர் அரவிந்த் சாமியிடம் கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் ஒரு திரைப்பட நடிகர், மாடல், தொழில்முனைவோர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். மணி ரத்னம் இயக்கத்தில் தளபதி படத்தில் ஒரு நடிகராக அறிமுகமானார், பின்னர் ரோஜா, பாம்பே, மின்சாரா கனவு, தனி ஒருவன், போகன் என வெற்றிகரமான படங்களில் நடித்தார். தற்போது அரவிந்த் சாமியின் கால்சீட் கிடைக்கவில்லையாம். இதனால் தற்போது நடிகர் ரஹ்மானிடம் கேட்டு உறுதி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.