ஜி. வி. பிரகாஷ் குமார் ஒரு இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர். வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் மதரசா பட்டினம், மயக்கம் என்ன, முப்பொழுதும் உன் கற்பனைகள், சகுனி, டார்லிங், காக்க முட்ட, தெறி என பல்வேறு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டில், பிரகாஷ் குமார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை “ஜி.வி.பிரகாஷ் குமார் புரொடக்ஷன்ஸ்” என்ற பெயரில் தொடங்கினார். அவரது முதல் படம் மத யானாய் கூட்டம், பாலு மகேந்திராவின் முன்னாள் உதவியாளரான விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார்.
காதல் பாடல்களால் நம் மனங்களை தன் விரல் இசையால் கட்டிப்போட்டவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது முழு நேர நடிகராகவே மாறிவிட்டார். 50 படங்களையும் கடந்து இசையமைத்து வருகிறார். அவரின் இசையமைப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் சூரரை போற்று. சூர்யாவின் நடிப்பில் சுதா கே பிரசாத் இயக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் ஒரு பக்கம் விஜய்யின் ரசிகரும் கூட. பாடகி சைந்தவி தனது குரலால் அனைவரையும் கவர்ந்தவர். அவர் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அண்மையில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. சைந்தவி தற்போது அக்குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.