அழகான அம்மா நடிகை என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கிலும் எல்லோருக்கும் அம்மாவாக நடித்துவிட்டு தற்போது சிறிது ஓய்வில் உள்ளார். சரண்யாவின் கணவர் ஆன பொன்வண்ணன் சரண்யாவின் வி ஷய ங்களில் அதிகம் தலையிட மாட்டார் என சரண்யா ஒரு முறை சொன்னது நினைவிற்கு வருகிறது.

அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பாராம். அதே சமயம் இரு குழந்தைகள் மீது பாசம் உண்டு என சரண்யா அதே பேட்டியில் சொல்லி இருக்கிறார். அழகான இரண்டு மகள்கள் பிரியாதர்சினி, சாந்தினி இருவரும் இன்று மருத்துவத் துறையில் பயின்று வருகிறார்கள். சினிமாவிற்காகவே சரண்யாவும், சரண்யாவின் கணவரும் பல்வேறு வகையான உதவிகள் செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சரண்யா அளித்த ஒரு பேட்டியில் பொன்வண்ணன் தன்னிடம் காதலை Propose செய்தது குறித்து கூறியுள்ளார். பொன்வண்ணன் அவர்கள் தன்னிடம் போன் செய்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த திரைப்படத்திற்கு உங்களுடைய கால்ஷீட் வேண்டும் என்று கேட்டதாகவும் கூறினார்.
அதற்கு சரண்யா எத்தனை நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டபோது 70 வருடங்கள் கால்ஷீட் வேண்டும் என அவர் கேட்டதாக கூறினார். அந்த பதிலை கேட்டு தான் அ தி ர் ச்சி அடைந்ததாகவும், அதன்பின்னர்தான் அவர் தனது காதலை வித்தியாசமாக Propose செய்கிறார் என்பதை புரிந்து கொ ண்டதா கவும் கூறினார்