அம்பானி மகள் திருமணம்… விலைக்கு வாங்கப்பட்ட 22 விமானங்கள்!.. அடேங்கப்பா இத்தணை ஆடம்பரமா?

விமானநிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு செல்ல போர்ஸ், ஜாகுவார், ஆடி, பென்ஸ், பி.எம்.டபிள்யூ., உட்பட் 1000க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி, ஆனந்த் பிராமல் ஆகியோரின் திருமணம் வரும் டிசம்பர் 12ல் மும்பையில் நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக, டிசம்பர் 8, 9ம் தேதிகளில் குடும்ப உறுப்பினர்கள், மற்றும் நெருங்கிய உறவினர்களுக்காக தனியாக இரண்டு நாட்கள் நிகழ்ச்சி உதைப்பூரில் நடக்கவுள்ளது.

தனியார் விமானங்கள்:
தவிர, ராஜஸ்தானில் வரும் 7ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதனால், உதைப்பூர் விமானநிலையம், தனியார் விமானங்களால், படுபிஷியாக மாறியுள்ளது. தினமும் குறைந்த பட்சமாக 30 முதல் 50 தனியார் விமானங்கள் அங்கு வந்த வண்ணம் உள்ளது.

சொகுசுக்கார்கள்:
தவிர, விமானநிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு செல்ல போர்ஸ், ஜாகுவார், ஆடி, பென்ஸ், பி.எம்.டபிள்யூ., உட்பட் 1000க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் அம்பானியின் விருந்தினர்களாக உள்ளதால், அப்பகுதியில் உள்ள 5 ஸடார் ஹோட்டல்கள் அனைத்தும் முழுமையாக புக் செய்யப்பட்டுள்ளன. தவிர, உதைப்பூர் விமானநிலையத்தில் இவருக்காக 22 தனிவிமானங்கள் நிறுத்த சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதனால் சிறப்பு விமானங்கள் மட்டும் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற விமானங்கள் தரையிறங்கியதும், பயணிகளை இறக்கிவிட்டு விட்டு உடனடியாக திரும்பி அனுப்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.