கடலில் மட்டுமே வாழும் அரியவகை திமிங்கலம் ஒன்று அமேஸான் காட்டுக்குள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, எது எப்படி காட்டுக்குள் வந்தது என்பதை தெரியாமல் அறிவியலாளர்கள் திணறிப் போயிருக்கிறார்கள். அமேஸான் காட்டுப்பகுதியில் வானத்தில் பிணந்தின்னிக் கழுகுகள் கூட்டமாக பறப்பதைக் கண்ட உயிரியலாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அப்பகுதிக்கு சம்பந்தமே இல்லாத திமிங்கலம் ஒன்று காட்டுக்குள் இறந்து கிடப்பதைக் கண்டனர். 36 அடி நீளம் கொண்ட அந்த திமிங்கலம் ஒரு 12 மாதக் குட்டியாகும்.

கடலிலிருந்து அந்த திமிங்கலம் எப்படி அமேஸான் காட்டுக்குள் வந்தது என்பது புரியாத உயிரியலாளர்கள் திகைத்துப்போயுள்ளார்கள். பிளாஸ்டிக் பொருட்கள் எதையாவது விழுங்கியதால் அது இறந்திருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். உயிரியலாளர்களும் அந்த திமிங்கலம் எப்படி கடலிலிருந்து 50 அடி தாண்டி காட்டுக்கு வந்தது என்பது தெரியாவிட்டாலும்,
ஒரு வேளை அது ஏற்கனவே இறந்திருக்கலாம் என்றும், பின்னர் பெரிய அலைகளால் அது அடித்து வரப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். திமிங்கலத்தில் உடலிலிருந்து உடற்கூறு பரிசோதனைக்காக.
சில பாகங்களை எடுத்துள்ள அவர்கள் பரிசோதனை முடிவுகள் வர பத்து நாட்கள் வரை ஆகலாம் என்றும், அப்போதுதான் எப்படி இந்த திமிங்கலம் காட்டுக்குள் வந்தது என்பதை ஓரளவு அறிய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.