அமெரிக்க பாலைவனத்தில் தோன்றிய பிரம்மாண்ட ஸ்ரீ சக்ர எந்திரம்! – உலக அழிவை குறிக்கிறதா? அதிர்ச்சி தகவல் உள்ளே!

உலகம் முழுதும் விடை தெரியாத பல அமானுஷ்யங்கள் இருக்கின்றன, அந்த வரிசையில் இந்துக்கள் அனைவராலும் புனிதமான எந்திரமாக கருதப்படும் ஸ்ரீ சக்கிரத்தின் வடிவம் அமெரிக்க நாட்டின் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் 13.3 மைல் சதுர பரப்பளவு கொண்ட வரைபடம் போன்று கண்டுபிடிக்கப்பட்டது மிகமுக்கியமானதாகும் .

அமெரிக்காவின் ஒரெகன் (Oregon) என்ற மாநிலத்தின் உள்ள மிக்கிபேசின் பாலைவனப்பகுதியில் பில்மில்லர் என்கிற இராணுவ அதிகாரியால் இந்த வடிவம் கண்டு பிடிக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு பில்மில்லர் என்கிற இராணுவ அதிகாரி சிறிய ரக விமானத்தால் இந்த பாலைவனப்பகுதியில் பயணம் மேற்கொண்டார். இந்த குறிப்பிட்ட பகுதியை கடக்கையில் பூமியில் விமானத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே காணப்படும் வகையில் 13.3 மைல் சதுர பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட ஸ்ரீசக்ர வரைபடம் அவர் கண்ணில் பட்டது.

இதுகுறித்து பில்மில்லர் மூலம் செய்தி பரவிய பின் ஆராய்ச்சியாளர்களால் ஆராயப்பட்ட பின்னரே இது இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் ஸ்ரீ சக்ரத்தின் வரைபடம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தின் மூலம் அரை மணிநேரம் சுற்றி பார்த்தால் மட்டுமே முழுமையாக பார்க்கக்கூடிய அளவிற்கு இந்த பிரமாண்டமான ஸ்ரீசக்ர வரைபடம் இந்த பாலைவனத்தில் யாரால் எதற்காக வரையப்பட்டது என்று இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

மிக துல்லியமான வகையில் அச்சுபிசகாமல் வரையப்பட்டுள்ள இந்த வடிவத்தை தரையிலிருந்து பார்க்கும்போது வெறும் வரிவடிவங்கள் மட்டுமே காணக்கூடியாத இருக்கும். வானத்திலிருந்து மட்டுமே காணக்கூடிய இந்த வடிவத்தை இந்த ஆள்நடமாட்டம் இல்லாத நிலபரப்பில் யார் வரைந்தது, எதற்காக வரையப்பட்டது, எப்போது வரையப்பட்டது போன்ற பல கேள்விகளுக்கு இன்றுவரை எவராலும் பதில் காணப்படவில்லை.

இந்த வடிவத்தை செயற்கையாக உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமான வடிவத்தை மனிதர்களால் உருவாக்க சாத்தியமே இல்லை என்று ஆய்வாளர்கள் உறுதிபடுத்துகிறார்கள்.

இந்த ஸ்ரீசக்ரத்தின் வடிவம் பூமியை கண்காணிக்கும் வேற்றுகிரகவாசிகளுக்கு செய்தி சொல்ல வரையப்பட்டதாக சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும் சிலர் இந்த ஸ்ரீ சக்ரத்தின் வடிவத்தையே வேற்றுகிரக வாசிகள் தான் வரைந்திருப்பார்கள் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

1990 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டாலும் இன்றுவரை விடைதெரியாத மர்மமாகவே இந்த ஸ்ரீ சக்ரம் நிலவிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.