அமலா பால் – விஜய் விவாகரத்துக்கு காரணம் நடிகர் தனுஷ் தான்..!! உண்மையை போட்டு உடைத்த ஏ.எல்.அழகப்பனால் பரபரப்பு..!!

நடிகை அமலாபால் – இயக்குனர் ஏ.எல்.விஜய் விவாகரத்து குறித்து முதல் முறையாக, பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் பிரபல தயாரிப்பாளரும், ஏ.எல்.விஜய்யின் தந்தையுமான ஏ.எல்.அழகப்பன். தல அஜித் நடித்த ‘கிரீடம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். இந்த படத்தை தொடர்ந்து, மதரசாபட்டினம்,  உள்ளிட்ட பல படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக தமிழ் திரையுலகில் தன்னுடைய பெயரை நிலை நிறுத்தினர் .

இயக்குனர் விஜய் தெய்வதிருமகள் படத்தை இயக்கியபோது, அந்த படத்தில் நடித்திருந்த நடிகை அமலா பாலுக்கும், இவருக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் தங்களுடைய காதலை வீட்டில் கூறி, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர் . பின் கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பி ரி ந்தனர். ஆனால் இதுவரை இவர்கள் இருவரும், தங்களுடைய விவாகரத்து குறித்து வெளிப்படையாக பேசியது இல்லை. இந்நிலையில் முதல் முறையாக, ஏ.எல்.விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் இவர்களுடைய பிரிவிற்கு காரணம் நடிகர் தனுஷ் தான் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், திருமணத்திற்கு பின் நடிகை அமலா பால் நடிக்க வேண்டாம் என முடிவு செய்திருந்தார். அவரை தனுஷ் அவருடைய  தயாரிப்பில் உருவான ‘அம்மா கணக்கு’ படத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் நடிக்க துவங்கிய பின்பு தான் விஜய் – அமலாபால் இடையே பி ர ச்ச னைகள் வர துவங்கியது என கு ற் றம் சாட்டியுள்ளார். இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இயக்குனர் ஏ.எல்.விஜய் அமலாவை விவாகரத்து செய்த பின், கடந்த ஆண்டு ஐஸ்வர்யா என்கிற மருத்துவரை திருமணம் செய்தார் .

Leave a Reply

Your email address will not be published.