“அமலா பால், கவலைப்படாதிங்க, – உங்க புருஷன் உங்கள நல்லா…” – அமலாபாலுக்கு சர்ச்சை நடிகையின் பகீர் பதிவு..! ஷாக்கான ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். மேலும் மைனா படத்தில் நடித்ததில் மூலம் மக்கள் மனதில் நிற்கும்படி ஆகிவிட்டார் அமலா பால். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துவிட்டார் இவர். நடிகை அமலா பாலுக்கும், இயக்குனர் விஜய் இடையே காதல் மலர்ந்தது. உடனடியாக இருவரும் திருமணமும் செய்துக்கொண்டனர்.  ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துக்கொண்டனர்.

விவகாரத்திற்கு பின்பு அமலா பால் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தனர். கடந்த வருடம் சொந்தக்காரர்களுக்கு மத்தியில் ஏ.எல்.விஜய் திருமணம் செய்துக்கொண்டார். இதன்பின் அமலாபால் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவர் மீது காதலில் இருக்கிறார் என்று தகவல் பரவியது. ஆனால், அமலாபால் அதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாவில் அமாலாபாலுடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார்.

ஆனால், புகைப்படங்களை வெளியிட்ட சில மணித்துளிகளில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இந்நிலையில், சர்ச்சைக்கு பேர் போன நடிகை ஸ்ரீ ரெட்டி அமலா பாலுக்கு ஆறுதல் சொல்லும் படி ஒரு பதிவை  வெளியிட்டுள்ளார். அதன் படி, ” கவலை படாதிங்க அமலாபால், உங்களுடைய பஞ்சாபி கணவர் உங்களை நன்றாக பார்த்துக்கொள்ளவார், மேலும் பஞ்சாபிகளை நான் நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.