அப்பா வேண்டாம்…. விட்டுவிடுங்கள் என உயிர்பிச்சை கேட்ட மகன்: கண்விழித்த தாய் கண்ட அதிர்ச்சி காட்சி

சென்னையில் பெற்ற மகனை சந்தேகத்தால் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் வேதவள்ளி என்பவரின் கணவர் சக்திவேல். இந்த தம்பதியினருக்கு சதீஷ் என்ற மகன் இருக்கிறான். சந்தேக குணத்திற்கு அடிமையான கணவர், அவ்வப்போது தனது மனைவி வேதவள்ளியுடன் சண்டைபோட்டு வந்துள்ளார். குடும்பநலன் கருதி வேதவள்ளி அமைதியாக இருந்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் அறிவுரை வழங்கியும் அவர் கேட்பதற்கு தயாராகவில்லை. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மகன் சதீஷ், தனது அம்மாவுக்கு சாகமாக பேசியுள்ளார்.

இதனால் கோபம் கொண்ட தந்தை, தனது மகனை சந்தேகப்பட்டுள்ளார். அன்றிரவு அனைவரும் தூங்கியபிறகு கத்தியை எடுத்து தனது மகன் சதீஷை கத்தியால் குத்தியுள்ளார். அப்பா என்னை விட்டுவிடுங்கள் என சதீஷ் கதறியும், அதனை கேட்காத சக்திவேல் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார். கண்விழித்து பார்த்த வேதவள்ளி தனது மகன் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை அதிர்ச்சியடைந்துள்ளார்.  உடனடியாக மகனை மருத்துவமனையில் அனுமதித்த போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உனக்கு ஏன்தான் இந்தக் கேவலமான சிந்தனை வந்தது. நாங்கள் என்ன பாவம் செய்தோம் என வேதவள்ளி கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்திலிருந்த சக்திவேல், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.

பொலிசார் விசாரித்தபோதுகூட வேதவள்ளி என்னை ஏமாற்றிவிட்டாள் என்று கூறியுள்ளார். நீண்ட நேரத்துக்குப்பிறகு சக்திவேல், மனமுடைந்து கதறி அழுதுள்ளார். தற்போது சக்திவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.