அப்பா பாணியில் நன்றி கூறிய ஆரியின் மகள் ரியா வெளியிட்ட வீடியோ!.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. இதன் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா இதன் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அதேபோல் ரைசா_ஹரீஸ் ஜோடி பியார் பிரேமம் காதல் படத்தில் நடித்தனர். தொடந்து அவர் நடித்த தாராள பிரபு படமும் ஹிட் அடித்தது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பேமஸ் ஆகிவிடலாம் என்பது பலரது நம்பிக்கை.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வின்னரான ஆரி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும் சரி, நிகழ்ச்சிக்கு பின்னரும் சரி ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக அவர் விவசாயம் குறித்து பெருமை உரிய விஷயங்களை தெரிவித்து வருகிறார் என்பதும், அவரது அறிவுரையின்படி தான் பாலாஜியே விவசாயம் செய்யவிருப்பதாக அறிவித்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த 5ம் திகதி ஆரியின் மகள் ரியாவின் பிறந்தநாளை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஆரி, விதைகளை பரிசாக கொடுத்திருந்தார்.

அந்த விதைகளை ஆரியின் மகள் விதைக்கும் புகைப்படத்தையும் ஆரி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தற்போது தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு ரியா நன்றி கூறியதோடு, அப்பா பாணியில் கைகளை வைத்து சல்யூட் அளித்துள்ள காணொளியினை ஆரி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Aari Arujunan (@aariarujunanactor)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *