அப்பாவானார் நடிகர் ஆர்யா.. என்ன குழந்தை தெரியுமா? இரட்டிப்பு மகிழ்ச்சியில் சகோதரர்… கடும் ஷாக்கில் ரசிகர்கள்!!

நடிகர் ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்த செய்தியை சொல்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மாமாவாகி உள்ளேன்.

எனது சகோதரர் ஆர்யா மற்றும் சாயிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிக்கு ஆளாகி உள்ளேன். ஆர்யா அப்பாவாக புதிய பொறுப்பை எடுத்துள்ளார் என்றுள்ளார்.

சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாக உள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் ஆர்யா இந்த படத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளதாக அவரை புகழ்ந்து வருகின்றனர் பாராட்டு மழையில் நனைந்து வந்த ஆர்யாவுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்த தகவல் வைரலானதில் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். எனினும் இது குறித்து ஆர்யா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வர வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.