இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அனுஷ்கா, விராட் கோஹ்லியின் திருமணம் இத்தாலியில் நடந்தது. குட்டி கோலி அல்லது அனுஷ்காவை எப்பொழுது பார்ப்பது என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இந்நிலையில் ”இப்போது நாங்கள் மூன்று பேர்” என்று விராட் கோலி அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக இருப்பதாக விராட் கோலி ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் அறிவித்து புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் உலகிற்கு அறிவித்திருக்கிறார்.
அனுஷ்காவும் தான் தாயாகப் போவதை சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பிரசவம் என்று தெரிவித்துள்ளார். அனுஷ்கா, கோலி வெளியிட்ட அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு அனுஷ்கா அதிக படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.
ஒரு நடிகை என்றால் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று இல்லை என அனுஷ்கா கூறினார். அனுஷ்கா நடிப்பில் கடைசியாக வெளியான இந்தி படம் ஜீரோ. ஷாருக்கான் நடித்த அந்த படம் ஃபிளாப்பானது. அனுஷ்கா வெப்தொடர்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.