பிக்பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் ஆண் போட்டியாளர்களில், பெண் ரசிகைகளுக்கு அதிகம் பிடித்தவர் என்றால் அது முகன் தான், முகன் என்றால் அந்தளவிற்கு பெண் ரசிகைகள் இருக்கின்றனர். இதுவரை இந்தியா பக்கமே வராத முகன், முதல் முறையாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வந்திருகிறார். இதனால் மலேசியாவில் இருக்கும் அவரின் தாயாரை சந்தித்து பிரபல ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. அதில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது, குறிப்பாக அபிராமியுடன், முகன் ஏன் இவ்வளவு Close-ஆ பழகுகிறார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அபிராமி காட்டும் அக்கறை, ஒரு நல்ல தோழியாக அவள் தோழ் கொடுக்கும் போது, அது முகனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அபி எதற்கெடுத்தாலும் அழுகிறாள் தான், ஆனால் அவளுக்கும் ஒரு Soft மனது இருக்கிறது.

அதுவே முகன் அவளிடம் இந்த அளவிற்கு இருக்க காரணம். அதுமட்டுமின்றி அவனை நான் இத்தனை நாட்கள் பிரிந்து இருந்ததில்லை, எத்தனை மணி ஆனாலும், வெளியில் இருந்தாலும், ஒரு விடியோ கால் மூலமாவது அவனை பார்த்துவிடுவேன், ஆனால் இப்போது என்று உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்கலங்கினார். அவனுக்கு பொங்கல் மற்றும் சில உணவுகள் எல்லாம் பிடிக்காது, ஆனால் பிக்பாஸ் வீட்டில் அதை எல்லாம் சாப்பிடும் போது நானே ஆச்சரியப்பட்டிருக்கிறேன்,
அவன் பிக்பாஸ் வீட்டில் படுவது எல்லாம் 5 சதவீத கோபம் தான், அவனுடைய முழு கோபத்தையும் காண்பித்தால் பிக்பாஸ் வீடு தாங்காது. அதே போன்று அவன் காதலிப்பதாக நதியா என்று கூறும் பெண் எனக்கும் தெரியும், நான் அவனிடம் பிக்பாஸை விட்டு கிளம்பும் போது கூட, ஏதேனும் பெண் இருக்கிறதா? சொல்லுடா என்று சொன்னேன். அவன் வந்து சொல்கிறேன் என்று கூறினான்.
ஆனால் இப்போது நதியா என்ற பெண்ணை காதலிப்பது போன்று கூறினான், ஒரு வேளை அந்த பெண்ணாக கூட இருக்குமோ? ஆனால் நான் உறுதியாக சொல்ல முடியாது, வரட்டும் கேட்டு பார்ப்போம். எனக்கு பிடித்த போட்டியாளர் என்றால் சாண்டி தான், ஆனால் முகன் வெற்றி பெற வேண்டும் என்று கூறி முடித்தார்.