அபிமன்யு கதாபாத்திரத்தில் தனி ஒருவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் இவர்தானாம்!! பெரிய வாய்ப்பை தவற விட்ட பிரபலம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனை அறிமுகமானார். அதன் பின்னர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றார். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தனி ஒருவன் படம் ஜெயம் ரவி சினிமா கேரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் ஜெயம் ராஜாவுக்கு இந்தப் படம் பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது சித்தார்த் அபிமன்யூ என்ற வில்லன் கதாபாத்திரம் தான். அரவிந்த்சாமி இந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் பெரிய புகழ் பெற்றார். அதற்கு தகுந்த மாதிரி பின்னணி இசையிலும் மிரட்டியிருந்தார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இந்நிலையில் இந்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்திற்கு முதலில் நடிக்க தேர்வானவர் மாதவன் தானாம்.

முதலில் ஜெயம் ராஜா அவரைத்தான் கேட்டுள்ளார். ஆனால் அப்போது வில்லனாக நடிக்க பெரிதும் ஆர்வம் காட்டாத மாதவன் இந்த கதாபாத்திரத்தை தவற விட்டு விட்டாராம். அந்தப் படம் வெளியான பிறகு ஜெயம் ரவி கதாபாத்திரத்தை விட அரவிந்த்சாமி கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு கதாபாத்திரத்தை மிஸ் செய்து விட்டோமே என பின்னாடி வருத்தப்பட்டாராம் மாதவன்.

Leave a Reply

Your email address will not be published.