பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் அவரை ஒப்படைத்த பெண் யார் என்பது குறித்து தெரியவந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானிய வீரர்களால் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று விடுவிக்கப்பட்டார். வாகா எல்லையில் அபிநந்தனை பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஒரு பெண் அதிகாரி தான் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். நேற்று வெளியான அனைத்து புகைப்படங்களிலும்,அபிநந்தனுடன் சேர்ந்து இந்தப் பெண்ணும் வைரலான நிலையில் அவரின் பெயர் டாக்டர். ஃபரிஹா புக்தி என தெரியவந்துள்ளது.
புக்தி, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இந்திய வெளியுறவு தொடர்பான விவகாரங்களை கையாளும் பிரிவில் இயக்குநராகச் செயல்பட்டுவருகிறார். இதன் காரணமாகவே நேற்றிரவு அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க அவர் வாகா எல்லைக்கு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
